சென்னை கன்டோன்மெண்ட் போர்ட்டில் நிரப்பப்பட உள்ள ஆயா வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆயா (மகளிர்)
காலியிடங்கள்: 2 இதில் 1 இடம் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கான இடத்திற்கு 25 வயதுக்குள்ளும், எஸ்சி. பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.200. இதனை சென்னையில் மாற்றத்த வகையில் "Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount" என்ற டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai - 600016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 18.08.2018 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். தொலைதூரப் பகுதிகளில் வரும் விண்ணப்பங்கள் 25.08.2018 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.