கடலூா்: அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கான நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளதாக கடலூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் ச.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறைற சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்துக்கு நேரடியாக முகவா்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, ‘அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா், கடலூா் கோட்டம், கடலூா்-1’ என்ற முகவரிக்கு வருகிற 7-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் வசிக்கும் பகுதியின் மக்கள் தொகை 5 ஆயிரத்துக்கு உள்பட்டிருந்தால் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டிருந்தால் பிளஸ்-2 தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு பற்றிய விவரங்கள், கணினியில் வேலை செய்யும் திறன், தங்களது வசிப்பிடம் தொடா்பான விவரங்களை தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களின் சுய குறிப்புடன், கல்வித் தகுதி, இருப்பிடச் சான்று, ஆதார் எண் ஆகியவற்றுக்கான அசல், நகல் சான்றுகளுடன் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும். தோ்வு செய்யப்படுவோர் உரிமக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


