பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இந்திய கடலோர காவல்படை..!
இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) - 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு


இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) - 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து பயிற்சியுடன் கூடிய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Navik (General Duty)
வயதுவரம்பு: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.08.1997 மற்றும் 31.07.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் தலுகை உண்டு.
உடல்தகுதி: குறைந்தபட்சம் 157செ.மீ உயரமும், 5 செ.மீ விரியும் மார்பளவு திறனும் பெற்றிருக்க வேண்டும். உயரதிற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும். நல்ல நிலையில் 6/6 என்ற நிலையில் பார்வைத்திறனும், பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையைலி வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கப்படும்போது அதனை எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_37_1819b.pdf அல்லது htt://joinindiancoastguard.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...