/

ஜன.31-இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ("சிடெட்') வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2020, 2:22 am

சென்னை: கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ("சிடெட்') வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

கடந்த ஜூலை 5-இல் நடைபெறுவதாக இருந்த தகுதித் தேர்வு கரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜன.31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தேர்வு ஜன.31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். மொத்தம் 135 நகரங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வெழுதும் நகரத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் நவ.7-ஆம் தேதி முதல் நவ.16-ஆம் தேதி வரை அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான நான்கு நகரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில், இந்த நான்கு நகரங்களைத் தவிர்த்து வேறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இது குறித்து மேலும் தகவல் பெற www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.