சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்குச் செல்வது குறித்து...

Foreign Secretary Vikram Misri

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி... - ANI

Published On :

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இதையடுத்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்த அவர் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வரும் மே மாதம் இந்தியாவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி அமெரிக்காவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதாக, சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் மிஸ்ரி அந்நாட்டின் வெளியுறவு பொதுச்செயலாளர் மார்ட்டின் பிரியன்ஸுடன் இணைந்து இந்தியா - பிரான்ஸ் வெளியுறவு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னர், ஜெர்மனியின் பெர்லின் நகரத்துக்குச் செல்லும் மிஸ்ரி இந்தியா - ஜெர்மனி இடையிலான வெளியுறவு கூட்டத்துக்கும் தலைமை வகிக்கின்றார்.

இந்தக் கூட்டங்களில், இந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, அணுசக்தி, செய்யறிவு (ஏஐ), மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Foreign Secretary Vikram Misri is visiting France and Germany on an official tour.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.