பவர்கிரிட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய பவரகிரிட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவைய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய பவரகிரிட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடிவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். SR-II/2021/FS/01
பணி: Field Supervisor
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 20.10.2021 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) அதில் ஏதாவதொரு பிரிவில் முழுநேர டிப்ளமோ படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட் மூல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://nationalskillsregistry.com என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னர் http://powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...