ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, தலைமைச் செயலகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!


சென்னை, தலைமைச் செயலகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை 

பணி: அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள்: 02 

சம்பளம்: மாதம் ரூ.15,700- 58,100

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணி: டிசம்பா் 3ம் தேதி நோ்காணல்

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஆர்டிஓவில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு சார்புச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2021 

மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது https://cms.tn.gov.in/sites/default/files/job/OA_Recruitment_251121.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com