மத்திய அரசில் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Administrative Officer
காலியிடங்கள்: 08

பணி: Assistant Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Sub-Regional Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணக்கு மற்றும் நிர்வாகவியில் துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம், சமூக பணி, புள்ளியியல், உளவியல், வணிகவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம், ஆயுர்வேத மருத்துவத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்று இந்திய மருத்துவ கல்விமுறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com