ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2022, 8:54 am

தினமணி

தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்துஏப்ரல் 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 06/2022

மொத்த காலியிடங்கள்: 81

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineer (Civil) - 60
பணி: Junior Engineer (Electrical) - 20
சம்பளம்: மாதம் ரூ.27,270

பணி: Deputy General Manager (Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் மூன்றாண்டு டிப்ளமோ, துணை பொது மேலாளர் பணிக்கு பி.இ முடித்து 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:14.4.2022  தேதியின்படி, 28 வயதுக்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பக் கட்டணம்: பொறியாளர் பணிக்கு மட்டும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.in. என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.04.2022 

மேலும் விவரங்கள் அறிய அறிய https://www.nbccindia.in/pdfData/jobs/Advt_JE_Civil_Elec_DGM_Civil_06_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.