ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய சிறைச்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய சிறைச்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


வேலூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Packer Clerk - 02
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேக்கிங்கில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Cook - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Garden Watchman - 01
சம்பளம்: 15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: Sanitary Worker - 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com