குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை என்ஐஎப்டி வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை என்ஐஎப்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.8102(26)Rect.Group- C-Post/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Accounts - 03
பணி: Assistant(Admin) - 01
பணி: Machine Mechanic - 01
பணி: Steno Grade -III - 01
பணி: Junior Assistant - 08
பணி: Library Assistant - 01
பணி: Lab Assistant - 08
பணி: Competency CI - 03
பணி: Competency E - 01
பணி: Competency F - 01
பணி: Competency G - 01
பணி: Competency A - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் நிர்வாகவியல் பிரிவில் அனுபவம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், இளநிலைப் பட்டத்துடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும்,  நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், செவிலியர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமித்திற்கு 30 வார்த்தைகள், இந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன், நூலகப் பிரிவில் பட்டம், அனுபவம் பெற்றவர்கள், டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், உற்பத்தி டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் ஜவுளி வடிவமைப்பு துறையில் டிப்ளமோ, தகவல் தொழில்நுட்பம் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை National Institute of Fashion Technology, Gandhinagar என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், முகவரி மற்றும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.nift.ac.in/gandhinagar/careers என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ்களின் நகல்கள், பயோ-டேட்டா மற்றும் டி.டி.யை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Gh-O Road, Gandhinagar - 262 007

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 13.08.2022

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
https://www.nift.ac.in/gandhinagar/sites/gandhinagar/files/inline-files/Recruitment%20of%20Group-%20C-%20Post_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com