கல்லூரி, பல்கலை விரிவுரையாளர் பணி: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட உள்ள விரிவுராயாளர், இளநிலை உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் போன்ற பணி...
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட உள்ள விரிவுராயாளர், இளநிலை உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

தேர்வு: CSIR-UGC NET Exam-2021

தகுதி: ஏதாவதொரு அறிவியல் துறையில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக், பி.பார்ம், எம்பிபிஎஸ் போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் குறைந்தது 50 சதவிகத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2022 - 06.02.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.csirnet.nta.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com