சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணி: மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு பணி அனுபவத்துடன் முதுகலை மருத்துவப் படிப்பு தேர்ச்சி பெற்ற 55 வயதிற்குட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ஊதியம் மற்றும் பணி ஆகியவற்றின் விவரங்களை 044-22505886/044-22502267 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 6379179200 என்ற கைப்பேசி எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in –இல் நேரிடையாக பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com