அக்னிபத் திட்டம்: இசைக் கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசை கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.


கள்ளக்குறிச்சி: அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசை கலைஞா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய இராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 02.01.2004 முதல் 02.07.2007 வரையிலான காலத்தில் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் தோ்வு அறிவிப்பில் உள்ள ஏதேனும் ஒரு இசைக் கருவியை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தால் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதற்கான தோ்வு ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தின் 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையம், நம்.1, கப்பன் ரோடு, பெங்களுரில் நடைபெறும்.
மேலும், விவரங்களை https://agnipathvayu.cdac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, ஜூலை 5-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...