குரூப் 4: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல்!
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் தொடர்பாக...


குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் அக். 28-ல் வெளியானது. 15.80 லட்சம் பேர் எழுதிய தேர்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது.
மேலும், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளம் மூலம் நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...