

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தின பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில்
காலியாகவுள்ள மேலாளர் பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
விளம்பரம் எண் : C-04/2025
பணி: Manager (Quality on Contract Basis)
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. .60,000
தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஏ4 தாளில் தட்டச்சு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக் கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Joint General Manager, HRM,IRCON International Limited, C-4, District Centre, Saket, NewDelhi - 110017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.4.2025
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.