
சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 2, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, இளநிலை உதவியாளர்(பிணையம்) 46, இளநிலை உதவியாளர் 11, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக் காவலர் 71 உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 25 முதல் மே 24 ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.