கடலோரக் காவல்படையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கடலோரக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 300 நவிக் பணியிடங்களுக்கு 10, பிளஸ் 2 முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய கடலோரக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 300 நவிக் பணியிடங்களுக்கு 10, பிளஸ் 2 முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Navik(General Duty)

காலியிடங்கள்: 260

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 47,600

தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கொண்ட பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

பணி: Navik(Domestic Branch)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 47,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கடலோரக் காவல்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்கட்டத் தேர்வு ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் கட்டத் தேர்வு ஜூன் மாதத்திலும், மூன்றாம் கட்டத் தேர்வு செப்டம்பர் மாதத்திலும் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி விவரங்கள் தேர்வு தொடங்குவதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தென்மண்டல பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடற்தகுதித் திறன் சோதனை நடத்தப்படும். அனைத்து விண்ணப்பத்தாரர்களும் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். உடற்திறன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோLனை நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கடலோரக் காவல்படையில் கடல்சார் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com