உணவு பாதுகாப்புத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உணவு பாதுகாப்புத்  துறையில் லேப் டெக்னீசியன் வேலை:  உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: 10/MRB/2025

பணி: Lab Technician (Grade - II)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,30,400

தகுதி: Chemistry, Bio-chemistry பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர்களில் மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர்கள் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினரைத் தவிர இதரப் பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிஎம்எல்டி பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு குறித்து மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, இதர அனைத்து பிரிவினர் ரூ. 300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.7.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited only through online mode up to 29.07.2025 for recruitment to the post of Laboratory Technician Grade – II in Tamil Nadu Food Safety subordinate Service.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com