கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :4 ஜூன் 2025, 9:39 am

DIN

காரைக்குடியில் செயல்பட்டுவரும் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.PS-04/2025

பணி: Project Associate

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 42,000

தகுதி: வேதியியல், இயற்பியல், கணிதம், பொருள் அறிவியல், நானோ அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடப் பிரிவில் எம்.எஸ்சி முடித்து குறைந்தது 3

ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் பொறியியல் துறையில் வேதியியல், மின்னணுவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Assistant

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது தோட்டக்கலை பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 9.6.2025

இடம்: Central Electrochemical Research Institute, Karaikudi.

விண்ணப்பிக்கும் முறை: www.cecri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.