உதவித்தொகையுடன் ரயில் சக்கரம் தொழிற்சாலையில் பயிற்சி

ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சி
இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே
Updated on
1 min read

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். RWF/AT-16/627(2024-25)

பயிற்சி: Trade Apprentice

மொத்த காலியிடங்கள்: 192

தொழிற்பிரிவு வாரியான காலியிடங்கள்:

1. Fitter - 85

2. Machinist - 31

3. Mechanic(Motor Vehicle) - 8

3. Turner - 5

4. CNC Programming cum Operator(COE Group) - 23

5. Electrician - 18

6. Electronic Mechanic - 22

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட ஏதாவதொரு தொழிற்பிரிவில் 50 சதவித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.3.2025 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ பிரிவில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செயயப்படுவர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.10,899 முதல் 12,261 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை The Principal Financial Advisor, Rail Wheel Factory, Bangalore என்ற பெயருக்கு டி.டி ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Principal Financial Advisor, Rail Wheel Factory, Bangalore.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 1.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com