
பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கெமிஸ்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 09/25
பணி: Assistant Chemist Trainee(ACT)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000
தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு பெறுவோர் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.30,000 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.
நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படும்போது பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1 லட்சத்துக்கான பணி உத்திரவாத பத்திரமும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.50,000-க்கான பணி உத்தரவாத பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், நாள் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றத்திறனாளி பிரிவினரைத் தவிர, இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.