
மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?
தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 01
பணி: Senior Statistical Analyst
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 2,00,000
வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Statistical Analyst
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ. 1,25,000
வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வேளாண் பொருளாதாரம், நிதி பொருளாதாரம், புள்ளிவிவரம், தரவு அறிவியல், மேலாண்மை, வணிக பகுப்பாய்வு ஆகிய ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள், ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.850, இதர அனைத்து பிரிவினரும் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.6.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







