தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மத்திய அரசின் சி-டாக் நிறுவனத்தில் வேலை: பி.இ, எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில்(சி-டாக்) வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

சி-டாக் நிறுவனத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 2:25 pm IST

மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்(சி-டாக்) முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.

1988 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் அதிநவீன சூப்பர் கணினி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியது. அதிநவீன கணினி தொழில்நுட்பம், மென்பொருள் வடிவமைப்பு, சுகாதார தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களை உருவாக்குதல், கணினி மற்றும் இணையத்தில் நாட்டின் மொழிகளை எளிமையாகப் பயன்படுத்தக் கூடிய கருவிகள் மற்றும் எழுத்துருக்களை உருவாக்குதல், அரசுத் துறைகளுக்கான பாதுகாப்பான இணையதள கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை உருவாக்குகிறது.

மேலும், மேம்பட்ட கணினி, மென்பொருள் மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் தொழில்முறை சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளையும் வழங்குகிறது.

இந்த நிறுவனம் சென்னை, புணே, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மையத்தில் காலியாக உள்ள 952 புராஜெக்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 951

கிளைகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

C-DAC Bengaluru- 272

C-DAC Chennai- 67

C-DAC Delhi- 3

C-DAC- Hyderabad- 76

C-DAC Kolkata- 28

C-DAC Mumbai- 45

C-DAC Noida- 211

C-DAC Pune- 162

C-DAC Thiruvananthapuram- 25

C-DAC CINE (NE)/ Guwahati- 46

C-DAC Mohali- 16

பணி: Project Manager

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்சிஏ, எம்.எஸ்சி முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 56-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Associate, Project Engineer(Fresher)

தகுதி : பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் பிஇ, பி.டெக் அல்லது கணினி அறிவியல் பிரிவில் எம்சிஏ, எம்.எஸ்சி முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்

பணி: Project Engineer (Experienced)

தகுதி : பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Technician

தகுதி : பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்

பணி: Project Associate

தகுதி : பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.careers.cdac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

C-DAC invites applications (only online) from interested candidates for various contractual positions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.