சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மத்திய துணை ராணுவப் படையில் வேலை: 10, +2 முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய ரிசர்வ் காவல் படையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ள தலைமைக்காவலர் மற்றும் காவலர் பணியிடங்கள் குறித்து...

CRPF Recruitment 2026 for 521 Sports Quota Posts

CRPF

Published On :

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப்-ல் நிரப்பப்பட உள்ள 521 காவலர் மற்றும் தலைமைக் காவலர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இளம் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: R-11-21/2026-Sports

பணி: Constable (General Duty (Sports Quota)-2025)

காலியிடங்கள்: 339(ஆண்கள் 258; பெண்கள் 81)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700-69,100

வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

பணி: Head Constable (General Duty) (Sports Quota-2026)

காலியிடங்கள்: 182(ஆண்கள் 150; பெண்கள் 32)

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.விளையாட்டு சாதனைகள் 30.9.2024-30.9.2026-கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்திருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், எஸ்டி பிரிவினர்- 162.5 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், (எஸ்டி பிரிவினர் 150 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். அனைவரும் உயரத்திற்கேற்ற உடல் எடையும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

RECRUITMENT OF MERITORIOUS SPORTSPERSONS FOR THE POST OF HEAD CONSTABLE AND CONSTABLE (GENERAL DUTY) UNDER SPORTS QUOTA-2026 IN CRPF.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.