புவி இயற்பியல் துறையில் டெக்னீசியன் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....

CSIR-NGRI Recruitment 2026

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி - CSIR

Published On :

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) ஒரு முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்....

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 1/ 2026

பணி: Technician

மொத்த காலியிடங்கள்: 21

பிரிவு: Fitter

காலியிடம்: 1

பிரிவு: Plumber

காலியிடம் : 1

பிரிவு: Electrician

காலியிடம்: 1

பிரிவு: Computer/IT Assistant

காலியிடங்கள்: 1

பிரிவு: Digital Photographer

காலியிடம்: 1

பிரிவு: Laboratory Assistant (Chemical Plant)

காலியிடங்கள்: 2

பிரிவு: Medical Laboratory Technician

காலியிடம்:1

பிரிவு : Physiotherapy Technician

காலியிடம்: 1

பிரிவு: Catering & Hospitality Assistant

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ,19,900 - 63,200

வயதுவரம்பு: 4.10.2026 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பிரிவுகள் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அபவம் பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ngri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CSIR-NGRI invites ONLINE APPLICATIONS from Indian Nationals only for filling up of the Technician posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.