ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணி
ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?


சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதிகள் உள்ள பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

பணி: பாதுகாப்பு அலுவலர்- 1 

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000 

தகுதி: சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in என்ற இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்து 05.11.2022 அன்று மாலை 6 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com