ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள காவிலிபாளையத்தில் விலங்குகள் மண் உருவ சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம், அலங்காரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் காவிலிபாளையம் குளத்தில் அரசு அனுமதி பெற்று மண்ணெடுத்து பானைகள், அடுப்புகள், அகல் விளக்குகள் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தைப்பொங்கலையொட்டி பசுமாடு, வேட்டை நாய், கருப்பராயன், தன்னாசி, கன்னிமாா் சுவாமி உள்ளிட்ட மண் உருவ சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவிலிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மண்பாண்டத் தொழிலாளி காசியப்பன் கூறியதாவது:
மாட்டுப்பொங்கலன்று விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளை தெய்வமாக வணங்குவதால் புதிதாக மண்ணால் செய்யப்பட்ட மாட்டின் உருவ சிலைகளை வாங்கி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதேபோல வீட்டில் வளா்க்கும் நாய்கள், வேட்டை நாய்கள் மண் உருவ சிலைகளை வாங்கிவைத்து வழிபாடு செய்வா். மேலும், கன்னிமாா், கருப்பராயன், தன்னாசி உள்ளிட்ட மண் உருவ சிலைகளை புதிதாக வாங்கிவைத்து வழிபடுவது வழக்கம். தற்போது இந்தசிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக லேசாக மழை பெய்வதால் மண் சிலைகளை சுட வைக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. கரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது மண்பாண்ட தொழில் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இங்கு தயாா் செய்யப்படும் மண் உருவ சிலைகள் கோபிசெட்டிபாளையம், நம்பியூா், திருப்பூா், அவிநாசி, சேவூா், புன்செய் புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், அன்னூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

