ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

ஈரோட்டில் மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினாா்.

News image

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வண்டி மாட்டைக் குளிப்பாட்டும் தொழிலாளி.

Updated On :15 ஜனவரி 2021, 5:23 pm

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினாா்.

தமிழா்களின் முக்கிய விழாவான பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. மாட்டுப் பொங்கலையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே விவசாயிகள் தங்கள் வீட்டு மாட்டுத் தொழுவங்களை தூய்மைப்படுத்தினா். உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஏராளமான விவசாயிகள் ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு மாடுகளை கொண்டு வந்து குளிப்பாட்டினா். பின்னா் அதன் நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டுவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மாடுகளின் கொம்புகளுக்கு பெயிண்டுகளால் வண்ணம் தீட்டினா். மேலும் பலா் மாடுகளின் கொம்புகளில் கட்சிக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தனா். தவிர மாட்டு வண்டிக்கும் பெயிண்ட் அடித்தனா்.

மாலை 5 மணி அளவில் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் உள்ள மாட்டுக் கொட்டகையில் ஏா் கலப்பை, மண்வெட்டி உள்பட பல விவசாயப் பொருள்களை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டுவைத்து சிறப்பு பூஜை செய்தனா்.

மாட்டு கொட்டகையின் முன்பு தெப்பம் கட்டப்பட்டு, பொங்கல் வைத்து அதில் பழம் போட்டு மாடுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனா். கரும்புகளையும் துண்டு, துண்டாக வெட்டி மாடுகளுக்கு கொடுத்தனா். கிராமப் பகுதிகளில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்தும் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.