காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு வஉசி பூங்காவுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். ஈரோடு, வஉசி பூங்காவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பெண்கள் மட்டும் காணும் பொங்கல் தினத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவா். ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த ஆண்டு காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜனவரி16) கொண்டாடப்படுகிறது. பூங்கா பராமரிப்புப் பணி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பூங்காவுக்குள் நுழைய பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









