

சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சில வேளைகளில், நேரடியாக போக்குவரத்துக் காவலர் அல்லாமல், டிஜிட்டல் முறையில் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படும். அது தொடர்பான விவரங்கள் வாகன ஓட்டிகளுக்கு செல்போன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அவ்வாறு வாகன விதி மீறலுக்காக இ-செலான் கிடைக்கப் பெற்றவர்களை, அதனை எப்போது வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் என்று விட்டுவிடாமல், உரிய காலத்துக்குள் செலுத்துவது நல்லது.
அதனை ஆன்லைனில் செலுத்த, கூகுளின் சென்று டிஎன் செலான் (TN chellan) என்று டைப் செய்து மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்துக்குச் செல்லலாம். இவ்வாறு செல்வதாக இருந்தால், அந்த இணையதளம் உண்மையான மாநில அரசின் இணையதளம்தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அல்லது நேரடியாக echallan.parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில், செலான் எண் அல்லது வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமம் எண் கொண்டு தேடலாம் என்ற வாய்ப்புகள் இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து அதனை உள்ளிட்டு கேப்சா கொடுத்து விவரங்களைப் பெறலாம். பொதுவாக செலான் எண் கொடுப்பது நலம்.
உள் உழைந்ததும் அந்த செலான் விவரங்கள் வெளியிடப்படும். அதில் அபராதத் தொகையை செலுத்தவும் என்று இருப்பதை கிளிக் செய்யவும்.
பிறகு செல்போன் எண் கொடுத்து ஓடிபியை பதிவு செய்து எந்த வகையில் பணத்தை செலுத்த முடியும் என்பதை தேர்வு செய்து, நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உள்படுவதாக கிளிக் செய்து தொடரவும்.
பிறகு, யுபிஐ அல்லது மொபைல் பேங்கிங், இணையதள பேங்கிங் முறைகளில் பணத்தை செலுத்தலாம். பணத்தை செலுத்தி முடித்தும், இ-செலான் செலுத்தப்பட்டதாக தகவல் வரும். பிறகு, அதே இணையதளத்துக்குள் மீண்டும் உள் நுழைந்து பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.