வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 - புகைப்படங்கள்

நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.-
Updated on
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிசார் செயற்கைக்கோள் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.

பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.
பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்.-
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com