மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் இன்று (அக்டோபர் 02) பிரசாரம் மேற்கொண்டார்.

முதல்வர் விஜய்க்கு தவெக-வினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டார்.

பிரசார வாகனத்தில் நின்றபடி முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

முதல்வர் விஜய், மதுராந்தகம் தொகுதியில், 'ரோடு ஷோ' வாயிலாக, வாக்கு சேகரித்தார்.

வழிநெடுகிலும் முதல்வர் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் விஜய்க்கு மலர் தூவி உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்.

பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்று முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

சாலையின் இருபுறமும் திரண்ட தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாமண்டூர், புக்கத்துறை, பழையனூர், படாளம், ஜானகிபுரம், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் புறவழிச்சாலை, மோச்சேரி, மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், எல்.எண்டத்தூர், செம்பூண்டி, பசுவங்கரணை, கீழாமூர், ராமாபுரம், மோகல்வாடி, பொற்பனங்கரணை, எலப்பாக்கம், ஆனைக்குன்னம், கீழ் அத்திவாக்கம், கடமலைபுத்தூர், பெரும்பேர்கண்டிகை, தேன்பாக்கம், மேல்மருவத்தூர் கோயில் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட 39 இடங்களில் வாகனம் மூலம் முதல்வர் விஜய் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், மதுராந்தகத்தில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முதல்வர் விஜய் இன்று மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



