
/
அரசியல்
ஸ்டாலின் கைது திமுகவினர் சாலை மறியல்
கூவத்துாரில் நடந்த குதிரை பேர விவகாரம் குறித்து, சபாநாயகர் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். கூச்சல், குழப்பம் நிலவியதை தொடர்ந்து, சபாநாயகர் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெயேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

1 / 13
Loading...
Updated On :15 ஜூன் 2017, 10:39 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




