புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

13.9.1976: பள்ளிகளில் விளையாட்டு கட்டாய பாடமாகும் - மத்ய மந்திரி அறிவிப்பு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

13.9.1976 - Dinamani

Published On :

ரெய்ப்பூர், செப். 12 - எல்லா பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய கல்வி இலாகா உதவி மந்திரி அரவிந்த் நேதம் அறிவித்துள்ளார்.

மத்யப் பிரதேசத்தில், ஹையர் செகண்டரி பள்ளிகளின் டிவிஷனல் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார்.

விளையாட்டுத் துறையில் திறமைசாலிகளைக் கண்டறிந்து ஊக்கம் தர வேண்டும் என்று அவர் கூறினார். பீஹாரில் ஆதிவாசிகள் சிலர் ஹாக்கி விளையாட்டு வீரர்களாக மாறியுள்ளது பற்றி அவர் குறிப்பிட்டார். மத்யப் பிரதேசத்திலும் இவ்வாறு செய்யலாம் என்று அவர் கூறினார்.

காவிரி நீர் பிரச்னை: த. நா. வரும் பிரதமருடன் சுகாதியா பேச்சு நடத்துவார்

சென்னை, செப். 12 - பிரதமர் இந்திராகாந்தி தமிழகத்துக்கு வரும்போது, காவிரி நீர்ப் பிரச்னையை அவருடன் தாம் விவாதிக்கப் போவதாகத் தமிழ்நாடு கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று இங்கு நிருபர்களிடம் கூறினார்

"கர்நாடக மாநிலத்தில் தற்போது நடவு நட்டு சாகுபடி ஆகி உள்ள பாசன நிலங்களுக்குத் தேவையானது போக மீதமுள்ள உபரி தண்ணீரை தமிழ்நாட்டின் தேவைக்காக கர்நாடக மாநிலம் கொடுத்துதவ வேண்டும் என்பது நம்முடைய கோரிக்கை" என்று சுகாதியா மேலும் கூறினார்.

ராஜ்பவனத்தில் இன்று காலை நிருபர்கள் கூட்டத்தில் கவர்னர் பேசினார்.

"வறட்சி நிலை மக்களை நேரில் கண்டறிவதற்காக தமிழகம் வரும் பிரதமரிடம் நமது கோரிக்கையை எடுத்துச் சொல்லி கர்நாடக மாநில அரசிடம் பேசி தண்ணீர் பெற்றுத் தரும்படி கேட்போம்" என்று அவர் தெரிவித்தார்.

"தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூர் செல்லும் பிரதமருடன் நீங்களும் சென்று கர்நாடக மாநில அரசிடம் பேசி தண்ணீர் பெற்று வரும்முயற்சியில் ஈடுபடுவீர்களா" என்று கவர்னரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு "அது பற்றி நான் இன்னமும் சிந்திக்கவில்லை’ என்று சிரித்துக்கொண்டே அவர் பதில் சொன்னார்

"முன்னாள் கர்நாடக மாநில கவர்னர் என்ற முறையில் தங்களுக்கு உள்ள தனியான செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுத் தரலாமே?" என்று கேட்டதற்கு நமது நிலைமையை உணர்ந்து கர்நாடக மாநில அரசே நமக்குத் தேவையான தண்ணீர் கொடுக்கும் என்று நம்புவதாக சுகாதியா பதில் சொன்னார். ...

Summary

13.9.1976: Sports to be a compulsory subject in schools – Union Minister's announcement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.