12. மின்சாரமும் பிசியோதெரபி மருத்துவமும்

சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பத்தலைவி ஒருவர் பிசியோதெரபி மருத்துவம்
12. மின்சாரமும் பிசியோதெரபி மருத்துவமும்

சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பத்தலைவி ஒருவர் பிசியோதெரபி மருத்துவத்திற்காக என்னை அணுகிய போது, அவர் முதலில் என்னிடம் சொன்னது, ‘எனக்கு கழுத்து வலி டாக்டர். 10 நாளைக்கு கரெண்ட் கொடுத்த சரியா போய்டும்’ என்றார். அவரே தொடர்ந்து, இதுக்கு பணம் எவ்வளவு ஆகும் என்றும் கேட்டார்.  எனக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டது உண்மைதான். திரைப்படங்களைப் பார்த்தும், அல்லது யாரோ சொன்ன தவறான தகவல்களின் அடிப்படையிலும், அல்லது வேறு ஒருவருக்கு தரப்பட்ட சிகிச்சையைத் தான் தனக்கும் தருவார்கள் என்ற புரிதலில் சிலர் மருத்துவர்களுக்கே அறிவுரை சொல்வார்கள். இந்தப் பிரச்னைக்கு இதானே தீர்வு என்று சில முன் முடிவுகளுடன் எங்களை அணுகுவார்கள்.  புரிதல் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அந்தப் புரிதல் தவறான கற்பித்தலை மற்றவர்களுக்கும் அதே கண்ணோட்டத்தை கொடுக்கிறது என்பது வருத்தமான செய்தி. எனவே உங்கள் பிரச்னை என்னவென்பதை மட்டும் மருத்துவரிடம் அல்லது தெரபிஸ்டுகளிடம் விரிவாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கான மருத்துவத்தை அவர்களின் அனுபவத்திலிருந்து கட்டாயம் சிறப்பாகத் தருவார்கள்.

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் எல்லா துறைகளும் அதி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், சில கண்டுபிடிப்புகளின் தேவையை மனிதன் காலத்திற்கு ஏற்ப மாற்றி கொண்டது புத்திசாலித்தனம். புதிய கண்டுபிடிப்புக்களை மனிதன் உள்வாங்கி அதனை ஒவ்வொரு இடத்திற்கு தேவையான அளவிற்கு மாற்றங்களை உட்புகுத்தியதால்தான், நவீன வாழ்வை வசதியுடன் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது இவ்வளவு ஆக்கபூர்வமான சக்தியாக மாறும் என்று யாரும் உணர்ந்து இருக்கமாட்டார்கள். மருத்துவ துறைகளில் நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது வரை இன்று மின்சாரத்தின் உதவி அளப்பரியது. உதாரணமாக அடிபட்ட ஒருவருக்கு x - ray எடுத்து எலும்பு முறிவு உள்ளதா என கண்டறிந்து எலும்பு முறிவு இருந்தால் அறுவை சிகிச்சை செய்து வீட்டுக்கு அனுப்பும் வரை மின்சாரத்தின் உதவி மிகவும் முக்கியமானது.

மின்சாரத்தை ஒரு சக்தியாக எண்ணினால் அதை விளக்கு எரிப்பதற்கு, மின் விசிறி இயக்குவதற்கு, ரேடியோ இயக்க எனத் தனிப்பட்ட முறையில் ஓவ்வொரு சாதனத்துக்கும் வெவ்வேறு அளவிலான மின்சாரம் தேவைப்படும். போலவே, பிசியோதெரபி மருத்துவர்கள் உபயோகிக்கும் மின்சாரம் பல்வேறு மாறுதல்களை அடைந்து, இயக்கும் கருவியின் உள் செல்லும் போதே மனித அளவிற்கு தேவையான அளவு மாற்றப்படுகிறது.  உள்ளே சொல்லும் 240 v  மின்சாரம் நாங்கள் உபயோகிக்கும் கருவிகளை வடிமைத்த கைதேர்ந்த மருத்துவ பொறியாளர்களால் வடிமைக்கபட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தகுந்தவாறு மாற்றம் பெற்று வெளியேறும் போது (OUTPUT) சிகிச்சைக்கு தேவையானவாறு மாற்றப்பட்டுவிடும். அதன் பிறகு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்போது அவர்களின் பாதிப்புகளுக்கு ஏற்ற அளவு மாறுப்பட்ட சக்தியை உருவாக்க பல்வேறு தொழில்நுட்பங்களை ஆராய்ச்சிகளின் மூலம் தெளிந்த பின்பே பரிந்துரைக்கிறார்கள்.

பொதுவாக வலியின் அளவை குறைக்கவும், வீக்கங்களை குறைக்க, சதை பிடிப்பை குறைக்க, செயலிழந்த சதை, நரம்புகளை மீண்டும் தூண்ட மின்சார கருவிகளின் தேவை முக்கியனமானது. கரண்ட் ஷாக் கொடுப்பதால் ஆயுள் குறையும், ரத்தத்தின் அளவு குறையும் என்பது எல்லாம் மூட நம்பிக்கையே. உள்ளே செலுத்தப்படும் சக்தியானது ஆக்கபூர்வமாக உபயோகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை பூரண குணம் பெறவே இந்த சக்தியின் உபயோகம் பயன்படுத்தப்படுகிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். இதனால் நீங்கள் இது போன்ற சிக்கிச்சை பெறும்போது பயப்படுவதோ, யோசிப்பதோ தேவையில்லாதது. என்னிடம் வந்த ஒரு மூதாட்டி, ‘ஏன்பா கரண்ட் கொடுத்த உடம்புல ரத்தம் குறைஞ்சுடும் சொல்றாங்க அப்படியா?’ என்றார், இது முற்றிலும் தவறான நம்பிக்கை, கைதேர்ந்த மருத்துவர்கள் இது போன்ற மருத்துவ முறைகளில் விட்டு விலகி கைகளைக் கொண்டே குணப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து இருப்பார்கள்.

ஒன்றை மட்டும் விளக்க விரும்புகிறேன். பிசியோதெரபிஸ்டுகளான நாங்கள் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வலிகளை குறைப்பதில்லை. வலியின் தன்மையை அதன் கால அளவை பொறுத்து நாங்கள் கொடுக்கும் மருத்துவமும் மாறுபடும்.  இது போன்ற பயத்தோடு வரும் பாதிக்கப்பட்டவர்களை மின்சாரம் பயன்படுத்தாமலும், எங்களால் 100 சதவிகிதம் பிசியோதெரபி மருத்துவம் வழங்க முடியும்.                

- T. செந்தில்குமார்                                                                                                                  பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்                                   ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி                                                                 சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். செல் - 8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com