புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நினைவாற்றலை அதிகரிக்க  உதவும் அருமருந்து

நினைவாற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த திப்பிலி வல்லாரைக் கீரைச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

News image
Updated On :19 ஜனவரி 2021, 7:38 am

தினமணி

நினைவாற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த திப்பிலி வல்லாரைக் கீரைச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

திப்பிலி      - 100 கிராம்
வல்லாரைக் கீரைச் சாறு  - 400 மி.லி

செய்முறை

முதலில் தேவையான அளவு வல்லாரைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி  அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். திப்பிலியை எடுத்துச் சுத்தப்படுத்தி அதனை வல்லாரைக் கீரைச் சாற்றில் கலந்து நன்கு ஊறவைக்கவும். நன்கு ஊறினபிறகு அதனை நன்கு உலரவைக்கவும்.உலர்ந்த பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் நினைவாற்றலை அதிகரிக்க  உதவும்  அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடு உள்ளவர்கள் இந்தச் சூரணத்தை  காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடவும். தேவைப்பட்டால் மூன்றுவேளையும் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.