புகைப்படம் காட்டும் "புதுவை'யின் பன்முகம்!
புதுதில்லி, மே 4: ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு புகைப்படம் வெளிப்படுத்திவிடும் என்பார்கள். தில்லி லோதி எஸ்டேட்டில் இந்திய, பிரெஞ்சு கலாசார மையத்தில் அலியான்ஸ் பிராங்கைஸ் கட்டட அரங


புதுதில்லி, மே 4: ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு புகைப்படம் வெளிப்படுத்திவிடும் என்பார்கள்.
தில்லி லோதி எஸ்டேட்டில் இந்திய, பிரெஞ்சு கலாசார மையத்தில் அலியான்ஸ் பிராங்கைஸ் கட்டட அரங்கில் நடைபெற்றுவரும் புகைப்படக் கண்காட்சி அதற்கு சான்றாக உள்ளது.
ஆம், "பாண்டிச்சேரி' என்னும் புதுச்சேரியின் பழமையான கலாசாரம், பாரம்பரியத்தை இயல்பான காட்சிகளுடன் வெளிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சி. பிரெஞ்சு மக்கள் வாழ்ந்து தங்களது கலாசாரத்தை விட்டுச் சென்ற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பல்வேறு பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன.
இன்னமும் பிரெஞ்சு மொழியின் சுவாசம் வீசும் இடமாக புதுச்சேரி உள்ளது. ஏனாம், மாஹே, காரைக்கால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி யூனியன் பிரதேசம்.
மே 20-ம் தேதி வரை...
அதன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் பல அரிய புகைப்படங்களைக் கொண்ட இக்கண்காட்சி, காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை, மே 20-ம் தேதி முடிய நடைபெறுகிறது. தஸ்வீர் நிறுவனமும், அலியான்ஸ் பிராங்கைஸ் நிறுவனமும் இணைந்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த செபாஸ்தியான் கோர்ட்ஸ் என்ற கலைஞரின் கை வண்ணத்தில் உருவான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...