இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை காலையில் இரு முறையும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நாள் முழுவதுமாகவும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் வியாழக்கிழமை காலையில் கூடியதும், வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் மறைவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கூச்சல் குழப்பம்: அதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மேங்கு வங்க மாநிலத்துக்குக் கூடுதல் அரிசி ஒதுக்காததைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பதில் அளிக்க அமைச்சர் இல்லை: மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ தலைமையில் மக்களவை மீண்டும் கூடியபோது, இலங்கை விவகாரம் தொடர்பாக பேச, மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரையை சாக்கோ அழைத்தார். ஆனால், இதுகுறித்து பதில் அளிக்க அவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் இல்லாததால், மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி இருந்தனர். இதையடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் துணைத் தலைவர் கரிய முன்டா தலைமையில் மக்களவை கூடியதுபோதும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்.... இலங்கை விவகாரம் மாநிலங்களவையிலும் வியாழக்கிழமை எதிரொலித்தது. கேள்வி நேரம் தொடங்கியதும் ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையைக் கண்டித்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் அவை கூடி மாலை 4 மணி வரை நடைபெற்றது. பின்னர் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் இலங்கை விவகாரத்தை எழுப்பியதால் அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



