விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

"திருக்குறள் எக்ஸ்பிரஸ்' இனி வாரம் இருமுறை இன்று முதல் அமல்

கன்னியாகுமரி-தில்லி நிஜாமுதீன் வாராந்திர திருக்குறள் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 12) வாரமிருமுறை இயக்கப்படுகிறது.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:43 am IST

கன்னியாகுமரி-தில்லி நிஜாமுதீன் வாராந்திர திருக்குறள் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 12) வாரமிருமுறை இயக்கப்படுகிறது.

"கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மாலை 7.15-க்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு முறையே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு நிஜாமுதீன் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642) சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.20-க்கு நிஜாமுதீனிலிருந்து புறப்பட்டு முறையே திங்கள், புதன்கிழமைகளில் காலை 8.45-க்கு கன்னியாகுமரி சென்றடையும்' என்று ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

19 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் நிஜாமுதீனிலிருந்து ஆக்ரா கேன்ட், ஜான்சி, போபால், இடார்சி, பெதுல், நாக்பூர், பல்ஹர்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கன்னியாகுமரி செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.