விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பிரசிடென்சி பல்கலைக்கழக வன்முறை: 2 பேர் கைது

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:28 am IST

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறியது: பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள பேக்கர் ஆய்வகம் (இயற்பியல் துறை) மற்றும் வேறு சில துறைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுபாதிப் பர்மன் மற்றும் ஜெயந்தா ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தில்லியில் மேற்குவங்க நிதியமைச்சர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.