நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (ஏப்ரல் 22) தொடங்க உள்ள நிலையில், ""2ஜி அலைக்கற்றை தொடர்பான ஜேபிசி வரைவு அறிக்கை, நிலக்கரி ஊழல் விவகாரம், தில்லியில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக பிரச்னை எழுப்பும்'' என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
தில்லி துவாரகாவில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரித்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) இறுதி வரைவு அறிக்கையை அதன் தலைவர் பி.சி. சாக்கோ தயாரித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அலைக்கற்றை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளார்.
வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்றபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 48,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரின் பெயரையும் இந்த விவகாரத்தில் ஜேபிசி தலைவர் சேர்த்துள்ளார்.
அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்ற நற்பெயரை பெற்றுள்ள வாஜ்பாய் மீது களங்கம் கற்பிக்க நினைத்தால் பாஜக சும்மாயிருக்காது. மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலும் வரைவு அறிக்கையை சாக்கோ தயாரித்துள்ளார். இந்த அறிக்கை குறித்து கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுடன் அவர் கலந்தாலோசிக்கவில்லை. இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மற்ற ஜேபிசி உறுப்பினர்களை தேசிய ஜனநாயக கூட்டணியும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து 25-ம் தேதி நடைபெறும் ஜேபிசி கூட்டத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் சாக்கோவிடம் கேள்வி எழுப்புவர்.
அலைக்கற்றை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தன்னை ஜேபிசி முன்பு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை சாக்கோ நிராகரித்தார்.
அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று ஜேபிசி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதையும் கண்டுகொள்ளாமல் இருவருக்கும் வரைவு அறிக்கையில் நற்சான்று வழங்கியுள்ளார் சாக்கோ. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை அறிக்கையை நேரடியாக தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை மீறி, அந்த அறிக்கையை மத்திய சட்ட அமைச்சர் பார்வையிட்டதாகவும் அதில் அவர் திருத்தம் செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் எழுப்புவர் என்று ராஜ்நாத் சிங் கூறினார். கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


