அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிசக் கட்சி (ஆர்.எஸ்.பி.) மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளின் தேசிய அரசியல் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில், பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, தேவவிரத பிஸ்வாஸ், அபானி ராய் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அரசியல் பிரகடனமும், மாற்றுக் கொள்கைக்கான 10 அம்சத் திட்டமும் ஒருமனதாக நிறைவேறியது.
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, மாற்றுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையுமாறு அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளையும் கேட்டுக் கொண்டனர். மாநாட்டில் நிறைவேறிய அரசியல் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள பிரச்னைகள் தொடர்பாக அடுத்த 4 மாதங்களில் நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ""மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெற வேண்டும். ஆனால் அது முன்கூட்டியே வருவதற்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத ஒரு முன்னணியை உருவாக்க நம்மால் முடியும். ஆனால் தேர்தலுக்காக மட்டுமே உருவானால் அது மாற்று அணியாக இருக்க முடியாது. அது மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் கூறுகையில், ""அடுத்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தலா 110-120 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் மகிழ்ச்சி அடையும். ஆனால் அவை அத்தனை இடங்களில் வென்றால் அது பெரிய அதிசயமாக இருக்கும். ராகுல் காந்தியையோ, மோடியையோ கண்டுகொள்வார் யாரும் இல்லை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அணியை தேர்தலுக்கு முன்பே அமைக்க சில கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு அமைக்க சில கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் அந்தக் கூட்டணியானது கொள்கை அடிப்படையில் உருவாகாவிட்டால், அது உரிய வகையில் அமையாது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

