சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இந்துத்துவ அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம்

இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார்.

News image
Updated On :21 ஜூலை 2013, 10:20 pm IST

இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பெüர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியது:

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) குறிக்கோள்கள், செயல்பாடுகள் குறித்து அறியாததால் அந்த இயக்கத்தைப் பற்றி பல காரணங்களுக்காக பல தவறான கருத்துகள் நிலவிவருகிறது.

சமூகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து, இந்தியாவை வலுவுள்ள நாடாக உருவாக்கும் பெரும் கடமையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருக்கிறது. இந்துத்துவ அடிப்படையில் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளின் நோக்கம். இந்துத்துவம்தான் இந்தியாவின் அடிப்படையும் அடையாளமுமாகும். இந்துத்துவத்தை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கோட்பாடாக எண்ணுவது தவறு.

ஒரு கட்சியின் மூலக் கருவாக ஆர்.எஸ்.எஸ்.ûஸ எண்ணுவதும் தவறு. ஒரு அரசியல் தலைவர் அல்லது அரசியல் கட்சியால் ஒரு நாட்டை வலுவுள்ளதாக உருவாக்க முடியாது. சரியான தத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தினால்தான் நாடு வலுவடையும்.

மாற்றம் என்பது சமூகத்திலிருந்துதான் ஏற்படுமே தவிர, ஒரு அரசியல் கட்சியால் ஏற்பட்டுவிடாது. அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றிவிடுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.