திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

42 வயது நபரின் இதயத்தில் இருந்து மிகப்பெரிய கட்டி அகற்றம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது பாபு லால் குப்தா என்பவரின் இதயத்தில் இருந்து 150 கிராம் எடையுள்ள உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த கட்டி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2016, 9:11 am

புது தில்லி : உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது பாபு லால் குப்தா என்பவரின் இதயத்தில் இருந்து 150 கிராம் எடையுள்ள உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த கட்டி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

மூச்சு விடுவதில் பிரச்னையோடு தில்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாபு லால்.

அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்தில் ஒரு கட்டி இருப்பதும், அது நுரையீரலுக்கு இரத்தம் செல்வதை தடுக்கும் வகையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த கட்டி அகற்றப்பட்டது. நோயாளி தற்போது குணமடைந்து வீடு செல்லவிருக்கிறார்.

இது 150 கிராம் எடையுடன் இருந்தது. இந்த கட்டி ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதயத்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிக எடையுடனான கட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.