திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: மத்திய அரசு மேல்முறையீடு

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2016, 6:45 am

புது தில்லி : உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.ஜி. முகுல் ரோஹத்கி மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விவரம் கிடைக்கப்பெறவில்லை. வாய்மொழி உத்தரவின் அடிப்படையில்தான் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று இன்றே விசாரிக்க வேண்டும் என்று ரோஹத்கி வேண்டுகோள் விடுத்தார். இன்றைய வழக்கு விசாரணை பட்டியலில் இதனை சேர்ப்பதற்கு, உச்ச நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பதிவாளரின் அனுமதி பெற்று, இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.