இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!

சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2016, 7:51 am

ஹைதராபாத்: சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சேவல் சண்டை நடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி (பொங்கல்) விழா கொண்டாட்டத்தின் பொழுது, ஜனவரி-14 அன்று சேவல் சண்டை நடைபெறுவதாக புகார் தெரிவித்து, இந்திய விலங்குகள் நல வாரியம், மனித சமூகத்திற்கான இந்திய மற்றும் சர்வதேச அமைப்பு பீப்புள் பார் அனிமல்ஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளும் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கான பொது உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி சேவல் சண்டைக்கான தடையை நீட்டித்து நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த தடையானது சங்கராந்தி சமயத்தில்நடைபெறும் சேவைகள் சண்டைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக சேவல் சண்டைகளை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த முறை சங்கராந்தி சமயத்தில் சேவல் சண்டைகள் எதுவும் நடத்தப்படாமல் கண்காணிக்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.