மருமகன் மீதான புகார்: நேர்மையான விசாரணை நடத்த சோனியா வலியுறுத்தல்

தனது மருகமன் லண்டன் நகரில் சொத்து வாங்கியதாகக் கூறப்படும் புகார் குறித்து, அரசு நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளி கொணர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கூறினார்.
மருமகன் மீதான புகார்: நேர்மையான விசாரணை நடத்த சோனியா வலியுறுத்தல்
Updated on
1 min read

ரேபரேலி (உத்ர பிரதேசம்): தனது மருகமன் லண்டன் நகரில் சொத்து வாங்கியதாகக் கூறப்படும் புகார் குறித்து, அரசு நேர்மையான விசாரணை  நடத்தி உண்மையை வெளி கொணர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கூறினார்.

உத்ர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியா காந்தி. இன்று தனது தொகுதிக்கு சென்ற சோனியா காந்தியிடம், ராபர்ட் வதோரா மீதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, ராபர்ட் வதோரா மீதான புகார்கள் என்பது 'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்ற பாரதீய ஜனதா கட்சியின் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

ஆளும் பாஜகவினர் காங்கிரஸ் மீது நாள்தோறும் பொய் புகார்களை கூறி வருகின்றனர். இந்த புகார்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும் என்றார்.

லண்டனில் பினாமி பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளரான சஞ்சய் பண்டாரியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு தொடர்பு இருந்தது குறித்த குறிப்புகள் மத்திய அரசுக்கு கிடைத்தது குறித்தான செய்திகள் இன்று வெளியாயின.

லண்டனில் பிரையான்ஸ்டன் ஸ்கொயர் என்ற சொத்தை சாட்டா என்பவர் பெயரில் ராபர்ட் வதேரா வாங்கியிருக்கலாம் என்றும், அந்த கட்டடத்தை மறுசீரமைப்பது முதல் பழுதுபார்த்தல், அலங்கரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் ஆயுத விற்பனையாளர் பண்டாராவுக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நடைபெற்ற இ-மெயில் தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் செய்திகள் வெளியாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com