ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: செல்போன் இணைய சேவை முடக்கம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஜம்முவில் செல்போன் இணைய

Published On :

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஜம்முவில் செல்போன் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 7 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில், 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 போலீஸார் உள்பட 32 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக, காவல்துறையினர் வந்த கவச வாகனத்தின்மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுடவே, பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். அதன்பிறகே, யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பில் ஏதேனும் ஒரு அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனந்தநாத் மாவட்டத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் செல்போன் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சேவை மட்டும் குறைந்த அளவிலான வேகத்தில் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.