அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டதுதான்: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்! 

தனி மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  நடந்து வரும் வழக்கில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:31 pm

DIN

புதுதில்லி: தனி மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  நடந்து வரும் வழக்கில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மத்திய அரசின் பெரும்பாலான சேவைகள் மற்றும் மானிய உதவிகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆதார் அட்டை விவகாரத்தில் குடிமக்களின் தனி மனித சுதந்திரம் உள்ளிட்ட விஷயங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

எனவே இதனை அரசியல் சாசன அமர்வின் மூலம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததன் பேரில் இந்த வழக்கானது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம், நேற்று முன்தினம் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் இன்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி மத்திய அரசின் நிலையை எடுத்து வைத்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

தனி மனித சுதந்திரம் என்பது முழுமையான ஒன்றாக இருக்க முடியாது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் படி எந்த ஒரு குடிமக்களும் அரசின் விசாரணைக்கு உட்பட்டவர்கள். எனவே தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றுதான்.

இவ்வாறு அவர் தனது வாதத்தினை எடுத்து வைத்திருக்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.